பொதுபல சேனா அமைப்புபின் செயலாளர் ஞானசார தேரரின் செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் சிலர் இன்று முற்பகல் அஸ்கிரிய மாநாயக்க தேரர்களை சந்தித்து விளக்கியுள்ளனர்.
இந்த சந்திப்பின் போது ராஜித சேனாரத்ன மீது பொதுபல சேனா அமைப்பு சுமத்தும் குற்றச்சாட்டு தொடர்பில் உண்மை நிலையை அஸ்கிரிய மாநாயக்கருக்கு புரிய வைத்ததாக அதில் கலந்து கொண்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சந்திப்பின் பின்னர் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன:
” பொதுபல சேனா செயலாளர் வெளியிட்டுள்ள பிழையான கருத்துக்கள் தொடர்பில் அதற்கான சட்ட ரீதியான எந்தவொரு நடவடிக்கைகளை மேற்கொள்ள அஸ்கிரிய மாநாயக்க தேரர்கள் எமக்கு அனுமதி வழங்கியுள்ளனர், அதேவேளை இவ்வாறான பிக்குகள் தொடர்பில் விரைவில் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த அமைப்புக்களின் நடவடிக்கைகளால் அஸ்கிரிய மாநாயக உட்பட மற்றைய நிகாயகளும் சஞ்சலத்துக்குட்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இவர்களிடமிருந்து பெளத்த மதத்தை பாதுகாக்க பெளத்த பிக்குகளுடன் இன்றைய சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென்றும் தெரிவித்தார்’ என அமைச்சர் கூறினார்.

இந்த சந்திப்பில் ராஜித சேனாரத்னவுடன் அமைச்சர்கள் ஜனக்க பண்டார தென்னகோன், மேர்வின் சில்வா, சாலிய திஸாநாயக்க, துமிந்த திஸாநாயக்க ஆகியோரும் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவும் கலந்து கொண்டனர். (ஸ)
http://dailyceylon.com/
No comments:
Post a Comment