பல்வேறு பல சேனாக்களை அரசாங்கமே போசித்து வளர்க்கின்றது – ரவீந்திர முதலிகே


நாட்டின் பல்வேறு பல சேனாக்களை அரசாங்கமே போசித்து வளர்த்து வருவதாக சம உரிமைகளுக்கான அமைப்பின் அழைப்பாளர் ரவீந்திர முதலிகே தெரிவித்துள்ளார்.

மிலேச்சத்தனத்தை நோக்கி நகரும் தற்போதைய சமூகத்தில் பல கடும்போக்குடைய அமைப்புக்கள் உருவாயின. இதில் பல்வேறு பல சேனாக்கள் அரசாங்கத்தின் மடியிலேயே போசிக்கப்பட்டது.

அனைத்து இன மக்களுக்கும் சம உரிமைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

வரலாற்றுக் காலம் முதல் ஆட்சியாளர்கள் தங்களது லாபத்திற்காக இன மற்றும் மதவாத முரண்பாடுகளை போசித்தனர். இதன் விளைவாக சிங்கள, தமிழ் முஸ்லிம் மக்கள் மோதிக்கொண்டனர்.

பல்வேறு பலசேனா அமைப்புகள் அரசாங்கத்துடன் ஆதரவில் வளர்ச்சியடைந்துள்ளன. சில அமைப்பக்களை அரசாங்கத்தினாலும் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலைமை ஏற்பட்டுள்ளது.

உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேச ரீதியிலும் கடும்போக்குவாத சிந்தனைகளை பிரசாரம் செய்யும் தரப்பினர் ஆட்சியாளர்களின் கைப்பொம்மைகளே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் இன நல்லிணக்கம் தொடர்பில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment