இன்னும் ஓரிரு நாட்களில் நாட்டு மக்களுக்கு அனைத்தையும் வெளிப்படுத்துவேன் - வட்டரக்க விஜித தேரர்

நேற்று பிணையில் விடுதலை செய்யப்பட்ட வட்டரக்க விஜித தேரர் இன்னும் ஓரிரு நாட்களில் அனைத்து விடயங்களையும் நாட்டுக்கு தெரியப்படுத்தப் போவதாகத் தெரிவித்தார்.

நேற்று அவருக்குப் பிணை வழங்கப்பட்ட பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

"பொது பல சேனா என்பது முஸ்லிம் சிங்கள மற்றும் தமிழ் என்ற வேறுபாடு இல்லாமல் நாட்டுக்குத் தீ வைத்து இந்த நாட்டை இரத்த களமாக்கத் தோன்றிய ஒரு அமைப்பாகும். எனது உயிரே போனாலும் இந்த நாட்டு மக்களின் ஒற்றுமை மற்றும் புரிந்துணர்வுக்காக எனது பங்களிப்பை வழங்குவேன் என்பதை முழு உலகுக்கும் வாக்குறுதி அளிக்கிறேன். நாளை என்னை எவ்விடத்திலாவது கொன்று போடுவார்கள். எனக்கு இந்த நாட்டில் போக எந்த இடமும் இல்லை. நாளையோ மறுதினமோ மீண்டும் உங்களுக்கு அனைத்து விடயங்களையும் நான் வெளிப்படுத்துவேன்." எனக் கூறினார்

No comments:

Post a Comment