இந்நிலையில் மரண சான்றிதழ்களில் மரணத்துக்கான காரணம் வெட்டுக்காயங்கள் என தெரிவிக்கப்பட்டு சம்பவத்தை திசை திருப்பும் முயற்சி இடம்பெற்றமை கண்டறியப்பட்டு விவகாரம் நாடாளுமன்றிலும் பேசப்பட்டிருந்தது.
அரசியல் தரப்பு மாத்திரமன்றி சட்டத்தரணிகள் சங்கமும் இதில் கூடுதல் கவனம் செலுத்திய நிலையில் மீள் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது மரணத்துக்கான காரணம் வெட்டுக்காயங்கள் அல்ல, துப்பாக்கி சூடு என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதேசத்தின் மீள் கட்டுமான பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் மறு புறத்தில் ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டத்தில் நீதி நிலை நாட்டப்பட்டுள்ளதுடன் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான அநியாயத்தை எதிர்த்து மேற்கொள்ளப்பட்ட போராட்டத்திற்கு வெற்றியும் கிடைத்திருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்!
கடந்த பெருநாளுக்கு இரு தினங்களுக்கு முன்பாக மேலும் இரு சகோதரர்கள் கால்களின் பாகங்கள் அகற்றப்பட்ட நிலையில் தற்போது வீடு வந்து சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. - சோனகர்
No comments:
Post a Comment