நாம் நோர்வே போனது உண்மை. அது எல்லோரும் தெரிந்த ஒன்று. எரிக்சொல்ஹேய்ம் உடன் இருந்து புகைப்படமும் எடுத்தோம். அமெரிக்காவிலுள்ள ஒபாமாவையும் நான் சந்தித்தால் அவருடன் இருந்தும் புகைப்படம் எடுப்போம். அதற்கு நாம் யாரிடமும் அனுமதி பெற வேண்டியதில்லையென பொதுபல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ராஜித சேனாரத்ன தான் புலிகள் அமைப்போடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தொடர்ந்தேர்ச்சியாக குறிப்பிட்டு வருவது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.
தான் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது புலம் பெயர் தமிழர்களுடனாகும். புலிகள் அமைப்புடன் எந்தவிதப் பேச்சுவார்த்தையிலும் தான் கலந்துகொள்ளவில்லை.
புலிகளுடன் பேச்சுவார்த்தைக்குச் செல்ல ரவி கருணாநாயக்க தனக்கு பண உதவி செய்ததாகவும், புலி உறுப்பினர்களுடன் தான் எடுத்துக்குகொண்ட புகைப்படம் அமைச்சரிடம் இருப்பதாகவும் தெரிவிக்கும் கருத்தை முற்றாக மறுப்பதாகவும் தேரர் மேலும் கூறியுள்ளார்.
அடுத்தது. எமக்கு செலவு செய்ய ரவி என்பவர் யார்? சிங்களவராகவோ, தமிழராகவோ, முஸ்லிமாகவோ இல்லாத இரண்டும் கெட்ட இவர்கள் தான் இந்த நாட்டை நாஷமாக்குகிறார்கள். ராஜித என்பவர் கௌரவமான மனிதர் என்றுதான் நான் நினைத்தேன். இவர்கள் தமது அரசியல் வாழ்வு முழுவதும் நாடகத்தைத் தான் அரங்கேற்றுகிறார்கள். மனிதர்களை ஏமாற்றுவதென்பது இவர்களுக்கு ஒரு பெரிய விடயமே இல்லை. இவர்களுக்கு அமைச்சர் என்று சொல்லவும் வெட்கம் எனவும் சிங்கள ஊடகமொன்றுக்கு தேரர் மேலும் கூறியுள்ளார். (மு) http://dailyceylon.com/
No comments:
Post a Comment