பொதுபல சேனாவின் பிக்குகள் எதிர்காலத்தில் இந்த நாட்டின் தலைமைத் துவத்தைக் கையில் எடுப்பார்கள். அப்போது இந்த ஹக்கீம் மயப்படுத்தலிலிருந்து இந்த நாட்டின் முஸ்லிம் மக்களைப் எம்மால் பாதுகாக்க முடியும்.
இந்நாட்டிலுள்ள பிக்குகளைக் கட்டுப்படுத்தாது போனால் இஸ்லாமிய அடிப்படைவாதம் உருவாக்கும் என ஹக்கீம் சர்வதேச ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ள கருத்து விநோதமான, நகைப்புக்குரிய ஒரு கூற்றாகும். முஸ்லிம் சமூகத்தை அடகு வைத்தது போதாமைக்கு, இந்த நாட்டையும் அடகு வைக்கும் ஹக்கீமின் ஒரு நடவடிக்கையே இதுவாகும்.
உள்நாட்டு ஆங்கில பத்திரிகையொன்றுக்கு ஹக்கீம் வழங்கிய செய்தியில், இலங்கையில் ஆயுதக் குழுவொன்று இருக்க வேண்டும் என ஒரு சிலர் விரும்புகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு ஆயுதக் குழு இருக்க வேண்டும் என்பது இந்த நாட்டிலுள்ள சிலரின் நீண்ட கால திட்டம். இதனுடன் பலம் பொருந்திய ஒரு குழு இருக்கிறது. இக்குழுவிடத்தில், முஸ்லிம்களை இனப் படுகொலை செய்யும் திட்டம் இருக்கிறது என பயங்கரமான ஒரு தகவலை வழங்கியிருந்தார்.
முஸ்லிம்களுக்கு எதிரான பயங்கரத் திட்டம் ஒன்று செயற்படுவதாகவும், பலம் பொருந்திய குழுவொன்று அதன் பின்னால் இருப்பதாகவும் ஆங்கில பத்திரிகையொன்றுக்கு ஹக்கீம் தெரிவித்திருந்தார். இது குறித்து இந்த நாட்டுக்குத் தெளிவுபடுத்துமாறு நாம் அவரிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம். அதேபோன்று, புலனாய்வுத் துறையினரிடமும், சர்வதேச பொலிஸாரிடமும் இது குறித்து ஆராயும் படி நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
நாட்டில் சட்டம் நீதி அமுல்படுத்தப்பட வில்லையென்ற குற்றச்சாட்டை இவர் சர்வதேசத்திடம் முன்வைக்கின்றார். சட்டம் நீதிக்கு பொறுப்பு யார்? ஜனாதிபதியே ஆவார். இவ்வாறிருக்கையில், தனது அரசாங்கத்தின் தலைவரையே சர்வதேசத்தில் காட்டிக் கொடுக்கும் ஒரு செயற்பாட்டை இவர் முன்வைக்கின்றார். இவரை அரசாங்கத்தில் வைத்திருப்பதாயின் அரசாங்கத்துக்கு கடவுளின் பாதுகாப்புக் கிடைக்கட்டும்.
இதுபோன்ற, குற்றச்சாட்டுக்களின் மூலம் இந்த அப்பாவி பௌத்த பிக்குகளுக்கும், சிங்களவர்களுக்கும் அடிப்பதற்கு நீதி அமைச்சு என்ற பதவியைப் பயன்படுத்துகின்றார் என்பது தெளிவான ஒன்று. எமக்கு முஸ்லிம்களுக்கு மட்டும் செயற்படும் நீதி அமைச்சர் தேவையில்லை எனவும் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment