பொது பல சேனாவின் பௌத்த சமய எழுச்சிக் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை 20-07-2014 பி. ப 5.30 மணிக்கு குருநாகல் மாவத்தகம நகரில் சாமோதய மண்டபத்திற்கு அருகில் நடைபெறவுள்ளது.
அளுத்கமை சம்பவத்தின் மூலமான அதிர்ச்சியில் இருந்து முஸ்லிம்கள் இன்னும் முழுதாக மீளாத நிலையில் மீண்டும் இவ்வாறானதொரு கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை முஸ்லிம்கள் பாதுகப்புத் தரப்பினர் மீதும் அரசாங்கம் மீதும் வைத்துள்ள நம்பிக்கையை மேலும் பலவீனமடையச் செய்துள்ளது.
இந்நிகழ்வில் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தெ ஞானசார தேரர் கலந்து கொள்ளவுள்ளார்.
இந்நாளில் மாவத்தகம நகரில் வாராந்த பொதுச் சந்தை நடைபெறும் நாளாகும். பெருமளவிலான முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் கிராமங்களிலிருந்து இந்த சந்தைக்கு வருகை தருவது வழக்கமாகும். எனவே எமது பாதுப்பைக் கருத்திற் கொண்டு அன்றைய தினம் பெண்களும், சமூகமும் புத்தி சாதுர்யமாக நடந்துகொள்ளும்படியும் தனிமையிலான பயணங்களை தவிர்த்துக்கொள்ளும்படியும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். http://www.weligamanews.com/
No comments:
Post a Comment