இன்று (18) CNN இணையத்தளத்தில் இலங்கை ஜனாதிபதியினாலோ அல்லது அரசாங்கத்தினாலோ பொதுபலசேனா அமைப்பு பாதுகாக்கப்படவோ அல்லது விசேடமாக கவனிக்கப்படுவதாகவோ எதுவும்
இடம்பெறவில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க, சிஎன்என் செய்தி சேவைக்கு இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.
பொதுபலசேனாவுக்கு கோத்தபாய ராஜபக்ச உட்பட்டவர்களால் விசேட வரப்பிரசாதங்கள் கிடைக்கவில்லை.எவர் சட்டத்தை மீறினாலும் அவர்கள் தண்டனையை எதிர்கொள்வர் என்று மொஹான் சமரநாயக்க குறிப்பிட்டார்.
அளுத்கமை சம்பவம் குறித்து கருத்துரைத்த அவர் அது குறித்து தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறுவதாக கூறியுள்ளார் எனினும் அதன் முடிவுகள் குறித்து தம்மால் எதிர்வு கூற முடியாது என்றும் மொஹான் தெரிவித்துள்ளார் .
அதேவேளை பாதுகாப்பு செயலாளர் கோதாபாய ராஜபக்ஷ ஜாதிக ஹெல உறுமைய வுக்கும் பொது பல சேனாவுக்கும் ஆதரவாக பேசியிருந்தார் தயான் ஜெயதிலக தெரிவித்துள்ளார்
மேலும் தயான் ஜெயதிலக தெரிவித்துள்ள தகவலில் பாதுகாப்பு செயலாளர் கோதாபாய ராஜபக்ஷ பொது பல சேனாவின் வருகைக்கு முன்னரும் சிங்கள மத உரிமைகள் விடயத்தில் தொடர்பு பட்டவராக இருக்கிறார் எனவும் தெரிவித்துள்ளார்
நேற்று CNN இணையத்தளத்தில் வெளியாகியுள்ள ஆக்கம் ஒன்றில் மேற்படி கருத்துக்களையும் அந்த ஆக்கம் முன்வைத்துள்ளது. lankamuslims.org

No comments:
Post a Comment