அளுத்கம சம்பவம் பற்றிய விவாதம் பாராளுமன்றத்தில் இடம் பெற்றுக் கொண்டிரக்கும் போது அவர் குறுக்கிட்டு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் இங்கு மேலும் குறிப்பிடுகையில் பொலிசாரும், படையினரும் பார்த்துக் கொண்டு நிற்கும் போதே முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் மிதும், பள்ளிவாயல்கள் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளன.
அவர்களினால் பாதுகாப்பு வழங்க முடியவில்லை. இந் நிலையில் ஒன்று அரசாங்கம் சரியான பாதுகாப்பினை முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும். இல்லையேல் முஸ்லிம்களுக்கு ஆயுதங்களை பாதுகாப்புக்காக தரவேண்டும்.
1990ம் ஆண்டு புலிகளிடமிருந்து முஸ்லிம்களை பாதுகாப்பதற்கு ஆயதங்களை முஸ்லிம் இளைஞர்களுக்கு அன்றைய அரசு வழங்கியது போல இன்று தென்னிலங்கையில் மு;லிம்களை பாதுகாப்பதற்கு ஆயுதங்களை தரவேண்டுமென கோருகின்றேன் என தொவித்துள்ளார்.
No comments:
Post a Comment