பிரபாகரன் இருந்திருந்தால் கைவைத்திருக்க மாட்டார்கள்

பிரபாகரன் இருந்திருந்தால் தம் மீது கைவைத்திருக்க மாட்டார்கள் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள் என்று தெரிவித் திருக்கிறார் வடமாகாண சபை உறுப்பினர் அ.அஸ்மின். 

 "இன வன்செயலால் பாதிக்கப் பட்ட தர்ஹா நகருக்குச் சென்றிருந்தேன். அங்கு பாதிக்கப்பட்டு பள்ளிவாசலில் தங்கியிருந்த முஸ்லிம் பெண்மணி ஒருவர் என் கழுத்தைப் பிடித் துக் கேட்டார், பிரபாகரன் எங்கே? என்று. ஏன் என்று நான் கேட் டதற்கு பிரபாகரன் இருந்திருந் தால் முஸ்லிம்கள் மீது கை வைத்திருக்க மாட்டார்கள் என்றும் என்னிடம் தெரிவித்தார்.'' இப்படிக் கூறினார் அஸ்மின். முஸ்லிம்களுக்கு எதிராக அளுத் கமவில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்செயல்களைக் கண்டித்து யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக நேற்றுக் காலை ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. 

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தமிழர்த் தேசிய மக்கள் முன்னணியினர், ஜனநாயக மக்கள் முன்னணியினர், மார்க்சிச லெனின் கட்சியினர், முற்போக்கு தமிழ்க் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த வர்களும் முஸ்லிம் மக்களும் கலந்து கொண்டனர். போராட்டம் காலை 9 மணிக்கு ஆரம்பமாகி ஒரு மணி நேரம் நடந்தது. 

அங்கு உரையாற்றிய, வடக்கு மாகாணசபை உறுப்பினர் அ.அஸ்மின் மேலும் தெரிவித்ததாவது: 

தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையில் அரசியல், கருத்தியல், கலாசார ரீதியிலான முரண்பாடுகள் இருந்தாலும், மனிதர்கள் என்ற ரீதியில் இன்று இணைந்திருக்கின்றோம். பல சந்தர்பங்களில் தமிழர்களாகிய உங்களின் வழிகளை முன்மாதிரியாகக் கொண்டுள்ளோம். 

தமிழ் சமூகத்தின் போராட்டம் இவ்வளவு தூரம் நீண்டு தொடர்ந்து வளர்ந்து வந்திருக்கின்றது என்றால், அந்தப் போராட்டத்தின் பின்னணியாக இருக்கின்ற நியாயமும் நீதி கேட்கும் தன்மையும்தான் அதற்குக் காரணம். இன்று முஸ்லிம் சமூகமும் அதனை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கின்றது என்றார்.

No comments:

Post a Comment