சீறிவிழும் ஜனாதிபதி! சிந்தை கலங்கும் அமைச்சர்கள்! ஆட்டிப்படைக்கிறது தோல்விப் பயம்

ஜனாதிபதி தொடக்கம் அமைச்சர்கள் வரை தோல்விப் பயம் அதிகரித்துள்ளதன் காரணமாக தீவிர கலக்கத்தில் இருப்பதாகவும், அமைச்சர்களுடன் ஜனாதிபதி கண்டபடி சீறிவிழுவதாகவும் அலரி மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன
எதிர்வரும் தேர்தல்களில் ஆளுங்கட்சி வெற்றிபெறுவதற்கான சாத்தியம் குறைவு என்பது தெளிவாகத் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் தமது அரசியல் எதிர்காலம் குறித்து அமைச்சர்கள் கலக்கமடைந்துள்ளனர். தோல்விப் பயம் அதிகரித்துள்ளதன் காரணமாக ஜனாதிபதியுடனான சந்திப்புகளின்போது ஆளாளுக்கு உளறிக் கொட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அலரி மாளிகையிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன. ஜனாதிபதியும் அதே மனோநிலையில் இருப்பதன் காரணமாக அவரும் பதிலுக்கு அமைச்சர்களிடம் சீறிவிழுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தின் தவறான பொருளாதாரக் கொள்கை, கூட்டணிக் கட்சிகளுக்கிடையிலான முரண்பாடு காரணமாக ஆளுங்கட்சிக்குள்ளேயே தற்போது பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது.
இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு அரசில் அங்கம் வகிக்கும் இனவாதிகள் சிறுபான்மை மக்களுக்கெதிரான திட்டமிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு ஜனாதிபதியை வற்புறுத்தி வருகின்றனர்.
அவ்வாறான ஒரு சில நடவடிக்கைகள் காரணமாக ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் சிறுபான்மைக் கட்சிகளும் அரசை விட்டு வெளியேறும் மனோநிலையைக் கொண்டுள்ளன.

இதற்கிடையே தற்போதைய நிலையில் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வரை சிறுபான்மை மக்களுக்கெதிரான நடவடிக்கைகளை திரைமறைவில் மேற்கொள்வதே ஜனாதிபதியின் அபிப்பிராயமாக உள்ளது. அதன் மூலம் அடுத்த தேர்தல்களிலும் சிறுபான்மையின வாக்குகளை கவர்ந்து கொள்வது அவரது நாட்டமாக உள்ளது.
எனினும் பேரினவாத அமைச்சர்களின் ஒரு சில நடவடிக்கைகள் காரணமாக சிறுபான்மை மக்கள் அரசின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இதன் தாக்கத்தை உணர்ந்துள்ள ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் சிறுபான்மைக் கட்சிகளும் அரசை விட்டு வெளியேறும் மனோநிலையைக் கொண்டுள்ளன.
இவ்வாறான நிலையில் அரசாங்கத்தை சுமுகமாக நடத்திச் செல்வதில் கடும் நெருக்கடிகளை ஆளுங்கட்சி எதிர்கொண்டுள்ளது. மேலும் சிறுபான்மை மக்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கான மறைமுக நடவடிக்கைகளைளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது.
ஜனாதிபதி இவ்வாறு இருதலைக் கொள்ளி எறும்பாக தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு நெருக்கமான ஜோதிடர்களும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியுள்ளனர்.
இந்த வருட இறுதிக்குள் பொதுத்தேர்தல் அல்லது ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது அரசாங்கத்திற்கு அனுகூலமாக இருக்கும் என்றும் அதன் பின் நடத்தினால் பின்னடைவு ஏற்படுவதை தடுக்க முடியாது என்றும் அவர்கள் ஒரு திரியைக் கொளுத்திப் போட்டுள்ளனர். எப்போதும் பௌத்த தேரர்கள் மற்றும் சோதிடர்களின் ஆலோசனைகளை அப்படியே பின்பற்றும் ஜனாதிபதியும் இது தொடர்பில் தீவிரமாக சிந்திக்கத் தொடங்கியுள்ளார்.
எனினும் தற்போதைய நிலையில் நாட்டு மக்களின் மனோநிலை அரசாங்கத்திற்கு சாதகமாக இல்லை என்பதை அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் தெளிவாக விளக்கியுள்ளார்.
மேலும் சில அமைச்சர்களும் பொதுமக்களின் தற்போதைய மனோநிலையில் பொதுத் தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுக்க நேர்ந்தால் தங்களின் வெற்றிவாய்ப்பு பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் உள்ளனர். இதன் காரணமாக ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை முன்கூட்டியே நடத்துவதே பொருத்தமாக இருக்கும் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
இதன் காரணமாக பொதுத்தேர்தல் அல்லது ஜனாதிபதித் தேர்தல் எதை முதலில் நடத்துவது என்பதில் முடிவெடுக்க முடியாத நிலை காணப்படுகின்றது. எனினும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாய்ப்புகளே அதிகமாக இருப்பதாக அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதித் தேர்தல் என்று முடிவெடுத்து விட்டால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தனக்கெதிராக பலமான பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்திவிடுவார்கள் என்றும் ஜனாதிபதி அச்சம் கொண்டுள்ளார்.
இவ்வாறாக ஜனாதிபதி தொடக்கம் அமைச்சர்கள் வரை ஆளுங்கட்சிக்குள் தோல்விப் பயம் அதிகரித்திருப்பதாகவும், இதனை தவிர்த்துக் கொள்ள விசேட மத வைபவங்களை எதிர்வரும் நாட்களில் ஏற்பாடு செய்வது குறித்து திட்டமிடப்படுவதாகவும் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmsyFSYLYgo1.html#sthash.gTSwHEdk.dpuf

No comments:

Post a Comment