மனோ கணேசனின் பேஸ்புக்கிலிருந்து..!
<நேரடி தொலைகாட்சி நிகழ்ச்சியில் அஸ்வர் தெரிவித்த பொன்மொழி>
இத்தகைய ஒரு கருத்தை அஸ்வர் பேசியது பற்றிய உங்கள் கருத்து என்ன? குறிப்பாக எனது முகநூல் முஸ்லிம் நண்பர்களிடம் கேட்கின்றேன்.
நேற்று (26/09/13) ஹிரு தொலைகாட்சி விவாதம் முடிந்து வீடு வர இரவு ஒரு மணி ஆகிவிட்டது. விவாதத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு முஸ்லிம் அன்பர், தம்புள்ளையிலிருந்து தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு அஸ்வரிடம் ஒரு கேள்வி கேட்டார். "இங்கே பள்ளி உடைக்கப்பட்ட போது நீங்கள், முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றும் செய்யவில்லை. இப்போதும்கூட இங்கே உள்ள பெளத்த பிக்கு எங்கள் பள்ளியை அகற்றிக்கொண்டு வெளியேற எங்களுக்கு காலக்கெடு விதித்துள்ளார். நீங்கள் என்ன செய்ய போகின்றீர்கள்?" என்பதுவே அந்த முஸ்லிம் அன்பரின் கேள்வியின் சாரம்சம்.
இதற்கு பதிலாக அஸ்வர், இந்த பள்ளி பிரச்சினையை தங்கள் அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாகவும், இப்போது அங்கு பிரச்சினை இல்லை என்றும், முஸ்லிம் மக்கள் தொடர்பாக அரசாங்கம் நியாயமாக நடந்து கொள்வதாகவும், சிலர் வெளியிலிருந்து மதவாதத்தை தூண்டி விடுவதாகவும் சொல்லிக்கொண்டே போனார்.
இந்த சந்தப்பத்தில் இடைமறித்த நான்,"அஸ்வர் கேள்வி கேட்டவர் தம்புள்ளையில் இருந்து கேட்டுள்ளார். அங்கு இன்னமும் பிரச்சினை முடிவுக்கு வரவில்லை என்கிறார். நீங்கள் ஒன்றும் இல்லை என்று சொல்கிறீர்கள். அவருக்கு நேரடியாக பதில் கூறுங்கள்" என்று சொன்னேன்.
உண்மை சுட்டதோ, தன்னிலை இழந்த அஸ்வர், கோபத்தில் என்னிடம்" நீங்கள் கோவிலை பற்றி பேசுங்கள். பள்ளியை பற்றி பேசாதீர்கள். இஸ்லாமிய பள்ளியை பற்றி பேசுவதானால் நீங்கள் -சுன்னத்- செய்துகொண்டு வாருங்கள். அதன்பிறகு பள்ளியை பற்றி பேசலாம்" என்று சொன்னார்.
இத்தகைய பண்பற்ற ஒரு கருத்தை பகிரங்க நேரடி தொலைக்காட்சி விவாதத்தின் போது சொன்ன அஸ்வருக்கு அதன்பிறகு நான் வட்டியும், அது போடும் குட்டியும், முதலுமாக கொடுத்து அனுப்பியது வேறு விடயம்.
ஆனால் இத்தகைய ஒரு கருத்தை அஸ்வர் பேசியது பற்றிய உங்கள் கருத்து என்ன? குறிப்பாக எனது முகநூல் முஸ்லிம் நண்பர்களிடம் கேட்கின்றேன்.
மனோ கணேசன்

No comments:
Post a Comment