முழுமையான அரசொன்றையும் ஜனநாயக முறையொன்றையும் எம்மிடம் ஆங்கிலேயர்கள் தந்து விட்டுச் சொன்றார்கள். ஆனால், நாம் அனைத்து இனங்களும் சுய மரியாதையுடன் ஐக்கியப்பட்டு வாழும் சூழலை சுதந்திரத்துக்குப் பின்னர்உருவாக்க தவறி விட்டோம். சகல சமூகங்களையும் சேர்ந்த தலைவர்கள் இன வைராக்கியத்தையும் குரோதத்தையும் துவேஷத்தையுமே வளர்த்தார்களே தவிர அவர்களிடம் இன ஐக்கியம் என்ற குறிக்கோள் இருக்கவில்லை.
இதனால் தான் இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடியது. சிங்கள தமிழ் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த பலர்மரணத்தைத்த தழுவினார்கள். துன்பங்களை அனுபவித்தார்கள். பலர்அகதிகளாக்கப்பட்டார்கள். சொத்துக்களுக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டது. 10லட்சத்துக்கும் அதிகமானவர்கள் நாட்டிலிருந்து வெளியேறினார்கள். நாட்டின் நிருவாக இயந்திரம்இ நிறுவனங்கள், சமூக அமைப்பு என்பன வீழ்ச்சியைத் தழுவியது.
30வருடங்களாக யுத்தம் நடந்து கொண்டிருந்தபோது கூட இந்த யுத்தம் ஏன் ஏற்பட்டது என்பது பற்றி யோசிப்பதற்குக் கூட எம் தலைவர்கள் தயாராக இருக்கவில்லை. யுத்தம் முடிந்த பின்னர்கூட உள்ளகக் கட்டமைப்பைச் சீர்செய்ய முயற்சிக்கிறார்களே தவிர மனித வாழ்வைப் பற்றி அவர்களுக்கு எக்கவலையுமில்லை.
யுத்தம் முடிந்த பின்னர்யுத்தத்தில் தோல்வி கண்டவர்கள் இராணுவத்திடமே ஒப்படைக்கப்பட்டார்கள். உலகில் யுத்தம் நடந்த எந்தவொரு நாட்டிலும் இப்படி நடந்த வரலாறில்லை. 1971ஆம் கிளர்ச்சியில் சம்பந்தப்பட்ட 18இ000பேர்சிறைகளில் அடைக்கப்பட்டார்களே தவிர ராணுவத்திடம் ஒப்படைக்கப்படவில்லை. அன்று சிறைகளில் இடமிருக்கவில்லை. அந்தளவுக்கு கைதிகளது தொகை அதிகமாக இருந்தது. சிறைச்சாலை அதிகாரிகளது எண்ணிக்கை 500வீதத்தால் அதிகரிக்கப்பட்டது.
இலங்கையில் யுத்தம் நிறைவடைந்தபோது 3வகையான கூறுகள் சீரழிந்து போயின. ஒன்று, மனிதர்களுக்கு ஏற்பட்ட துன்பம், உயிரிழப்புக்கள், மனக்குற்றங்கள். இரண்டு, அரச நிறுவனங்கள் சின்னாபின்னப்பட்டு சீரழிந்து போயின. மூன்று உட்கட்டமைப்பு உடைந்துள்ளது. இந்த உள்ளகக் கட்டமைப்பை சீர்செய்வதில் மட்டுமே தற்பொழுது முயற்சிகள் நடைபெறுகின்றன. நாட்டின் நிறுவனங்கள் பாரிய வீழ்ச்சி கண்டு நாற்றமெடுத்துள்ளன. நகரபிதாக்களே கொலைகளில் ஈடுபடுகிறார்கள். மக்கள் அரசியல்வாதிகளில் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள். அவர்கள் தேர்தல்களில் அரசியல்வாதிகளுக்கு வாக்களித்தாலும் உள்ளுர அவர்களை வெறுப்பதாகவே கூறுகிறார்கள். சகல இனங்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பற்றிய மக்களது மனப்பதிவும் அப்படித்தான் இருக்கின்றது.
சுதந்திரத்துக்குப் பின்னர்பல்லினங்களைக் கொண்ட இந்தியா பொதுவான ஒரு கொள்கைக்காக ஒருங்கிணைக்கப்பட்டது. தூரநோக்குள்ள தலைவர்கள் இவ்வேலையைச் செய்தார்கள். அங்கு குலவாதம் இருந்தது. இந்து - முஸ்லிம் பேதங்கள் இருந்தன. இவற்றுக்கு மத்தியில் ஐக்கிய இந்தியாவை உருவாக்க அத்தலைவர்கள் கற்பனையும் பண்ண முடியாத முயற்சிகளில் ஈடுபட்டனர். மகாத்மா காந்தி இந்த ஐக்கியத்தை கட்டியெழுப்ப தனது உயிரையே கொடுக்க நேர்ந்தது. அவர்பைபிள், குர்ஆன், பகவத் கீதை என்பவற்றிலிருந்து மேற்கோள் காட்டிப் பேசினார். அவர்அறிமுகப்படுத்திய தியான வழிபாட்டு முறை குறிப்பிடத்தக்கது. சிலபோது அவர்அந்த வழிபாடுகளை முஸ்லிம் வீடுகளில் கூட செய்தார். அதன் மூலம் ஒரு 'அச்சாறை" அவர்உருவாக்கினார்என்று கூற முடியாது. நாம் ஒவ்வொருவரும் பின்பற்றும் மதத்துக்கும் கலாசாரத்துக்கும் அப்பால் வேறு மதங்களும் கலாசாரங்களும் இருக்கின்றன. அவற்றை நாம் சகித்துக் கொள்ளப் பழக வேண்டும் என்ற
சிந்தனையை அவர்கொடுத்தார். இந்தியாவில் பல முரண்பாடுகள் இருக்கின்றன. ஆனால், பலமான நாடாக அதனை சுதந்திரத்துக்குப் பின்னர்கட்டியெழுப்புவதில் இந்தத் தலைவர்கள் வெற்றி கண்டனர். துரதிஷ்டவசமாக எமக்கு அந்தப் பாக்கியம் கிட்டவில்லை.
சிங்கள, முஸ்லிம் தலைவர்களுக்கு மத்தியில் ஐக்கிய தேசம் பற்றிய பார்வை இருக்கவில்லை. நாட்டை முன் கொண்டு போக வேண்டுமாயின் அனைவரையும் பெருமைப்படுத்த நாம் முயற்சிக்க வேண்டும்.
இன்று எமக்கு நல்லதொரு சட்ட யாப்பு தேவைப்படுகிறது. அனைத்து இனங்களையும் அரவணைத்துச் செல்லத்தக்க சகல இனத்தவர்களும் சுயமரியாதையுடன் வாழத் தக்க வகையிலான அரச முறைமை தோற்றுவிக்கப்பட வேண்டும். மக்களை நேசிக்கின்ற படித்த தலைமைத்துவங்கள் உருவாக்கப்பட வேண்டும். மக்கள் இன்று சிந்திக்கிறார்கள். கனவில் கூடி படிக்கிறார்கள். நல்ல பேச்சாளர்களுக்கு அன்று ஆயிரம் பேரை ஒன்று திரட்ட முடியுமாக இருந்தது. இன்று எல்லோரும் மதிப்பிழந்திருப்பதால் இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாற்றமெடுத்துள்ள அரச இயந்திரங்கள் சீர்செய்யப்பட வேண்டும்" என விக்டர்ஐவன் கூறினார்.
தேசிய சூரா சபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட விஷேட விரிவூரையின்போது ராவய பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர்இக் கருத்துக்களை வெளியிட்டார்.முஸ்லிம், முஸ்லிம் அல்லாத சமூகங்களைச் சேர்ந்த புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது சபையோரால் தொடுக்கப்பட்ட பல வினாக்களுக்கும் பதிலளித்தார்.
No comments:
Post a Comment