பொதுபல சேனா அமைப்பு பயங்கரவாத அமைப்பு எனவும் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தையும் மத ஐக்கியத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தன்னை அந்த அமைப்பு கொலை செய்ய முயற்சித்து வருவதாகவும் வடரேகா விஜித தேரர் குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்த நிலையில், ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்ட விஜித தேரர் மேலும் தெரிவிக்கையில்,
என்னை கொலை செய்ய முயற்சித்து வருவதால், நான் இப்போது ஒரு இடத்தில் தங்குவதில்லை. மாறி மாறி இருந்த வருகிறேன்.
இந்த நிலையில், ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்ட விஜித தேரர் மேலும் தெரிவிக்கையில்,
என்னை கொலை செய்ய முயற்சித்து வருவதால், நான் இப்போது ஒரு இடத்தில் தங்குவதில்லை. மாறி மாறி இருந்த வருகிறேன்.
மஹியாங்கனையில் அண்மையில் என்னை கொல்ல முயற்சித்தனர். பொலிஸார் என்னை காப்பாற்றினர்.
பொதுபல சேனா சம்பந்தப்பட்ட சிறந்த காணொளி ஒன்று என்னிடம் உள்ளது. வில்பத்து வனத்தில் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் அதில் பதிவாகியுள்ளன.
என்னை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசினாலும் அதனை பகிரங்கமாக வெளியிட மாட்டேன்.
அத்துடன் இந்த காணொளியை நான் அரசாங்கத்திற்கு பொலிஸாரிடமோ கையளிக்க போவதில்லை.
பொதுபல சேனா அமைப்பினர் வாகனத்தில் அமர்ந்து மது அருந்துவது, கிரிக்கெட் விளையாடுவது, நடனமாடுவது போன்ற காட்சிகள் அந்த காணொளியில் உள்ளன.
பொதுபல சேனா அமைப்பை போல் நாங்கள் மத விரோத, இனவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை எனவும் விஜித தேரர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment