நாட்டில் பெளத்த மதத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக பொதுபல சேனாவிடம் இருக்கும் ஆதாரங்களை வெளியிட்டால் நாட்டில் ரத்த ஆறு ஓடும் என பொது பல சேனா அமைப்பின் பொது செயளாளர் ஞானாசார தேரர் மவ்பிம நாழிதலுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டில் மத பிணக்குகளுக்கான பொலிஸ் பிரிவு அனாவசியாமனது எனவும், இரண்டு மூன்று வருடங்களுக்குள் இந்த மத பிணக்குகளுக்கான பொலிஸ் பிரிவை நிறுத்தாவிட்டால் காலப்போக்கில் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளது போல் ஒவ்வொறு பள்ளிவாயல்களிலும் இம் மத பிணக்குகளுக்கான பொலிஸ் பிரிவு அமைக்கப்படவேண்டிவரும் என்று ஹெல உருமய பாரளுமன்ற உறுப்பினர் அமைச்சர் சம்பிக ரனவக கூறிய கருத்தில் தவறுகள் ஏதும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Post a Comment