பொது பல சேனாவை தடை செய்யக் கோரும் மகஜர்

பொது பல சேனா அமைப்பை தடை செய்யுமாறு கோரும் மகஜர் ஒன்றுக்கான இணைத்தளம் மூலம் கையெழுத்து பெரும் நடவடிக்கை ஒன்று மேற்கோள்ளப் பட்டு வருகிறது .  இந்த மகஜரை change.org இணையதளத்தில் செய்யப்பட்டு பதிவுகள் பெறப்பட்டு வருகிறது . 

மகஜரை change.org இணையதளத்தில் பதிவு செய்துள்ள குழு  அறிவித்துள்ள தகவலில் கீழ் வருமாறு தெரிவிக்கப் பட்டுள்ளது


அண்மைக் காலமாக இலங்கை முஸ்லிம்களுக்கெதிரான இனவாத வெறுப்பு நடவடிக்கைகளைத் தூண்டிக்கொண்டும் அவற்றைப் பகிரங்கமாக முன்னெடுத்தும் வருகின்ற பொதுபலசேனாவை அனைவரும் அறிவோம்.

நமது நாட்டின் யுத்தத்துக்குப் பிறகான சகவாழ்வையும் அமைதியையும் குலைப்பதற்காக இச் சிறு அமைப்பு மேற்கொள்ளும் வன்முறைமிக்க நடவடிக்கைகள் இன மத பேதமின்றி நாட்டின் அனைவரையும் அசௌகரியத்துக்குள்ளாக்கியிருக்கிறது.இந்நிலையில் அரசாங்கமோ அல்லது சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களோ அவர்களைப் பாதுகாப்பதைத் தாண்டி சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு இன்னமும் காலந்தாழ்த்திக் கொண்டேயிருக்கின்றார்கள்.

இந்நிலைமை இப்படியே நீளும் பட்சத்தில் நிச்சயமாக இது நாட்டின் மதங்களுக்கிடையிலான நிரந்தரமான பகையாக மாற்றப்பட்டுவிடும் அபாயம் அனைவராலுமே உணரப்பட்டிருக்கின்றது. முஸ்லிம் சமூகத்தின் அரசியல்வாதிகளோ அல்லது புத்திஜீவிகளோ இது பற்றிய பேச்சுக்களைத் தாண்டி ஆக்கபூர்வமான முன்னெடுப்புக்களை மிக அரிதாகவும் காலந்தாழ்த்தியுமே செய்ய முனைகின்றனர்.

இதனை உணர்ந்த ஒரு சிறு நண்பர்கள் குழுவாகிய நாம் இப்பிரச்சினை பற்றிய பாரதூரத்தினை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட அனைத்துத் தரப்பினருக்கும் இத்தகைய இனவாத நடவடிக்கைகளை நிறுத்தக் கோரும் ஒரு பலமான மக்கள் சக்தியின் அழுத்தமாகப் பிரயோகிக்கும் ஒரு சிறு நோக்கில் இந்த  இணையக் கையெழுத்து மகஜரினை உருவாக்கியிருக்கிறோம்.http://goo.gl/uZ2ZTY  இதனூடாக கணிசமான ஆதரவாளர்களை இன மத மொழி வேறுபாடின்றி ஒன்று திரட்டி பொதுபலசேனா என்கின்ற பிரதானமான இந்த இனவாத அமைப்பினைத் தடைசெய்யும் கோரிக்கையினை முன்வைக்கிறோம்.

தனியான அடையாளங்களினால் அரசியல் முகங்கள் உருவாவதைத் தவிர்த்து பொதுவான, எல்லோரினதும் ஒருமித்த குரலாக இம்மகஜரை change.org என்கின்ற இணையத்தளத்தினூடாக அனுப்பும்படி செய்திருக்கிறோம்.

ஆரம்பித்த கடந்த இருபத்தினான்கு மணித்தியாலங்களுக்குள் பல்வேறு நாடுகளிலிருந்தும் ஐநூறுக்கும் மேற்பட்ட ஆதவராளர்கள் கையொப்பமிட்டிருக்கின்றார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தி. இம்மாதம் 20ந் திகதியோடு தம்புள்ளைப் பள்ளிவாயல் அத்துமீறல் நடந்து இரண்டாவது வருடம் பூர்த்தியாகின்ற நிலையில் அதே திகதில் இம் மகஜரைக் கையளிக்க பத்தாயிரம் ஆதரவாளர்களின் கையொப்பங்களை சேகரிப்பதே எமது எண்ணம்.இதில் எவருடைய தனிப்பட்ட அடையாளங்களும் இச் செயற்பாட்டின் போதோ அல்லது இதனை வெற்றிகரமாக கையளித்து சிவில் சமூகத்தின் பலத்தினை சமூகவலைத்தளங்களினூடாக வெளிப்படுத்திய பின்போ இதுவொரு சுயலாப அரசியலுக்கான முகவரியாகிவிடக் கூடாதென்பதற்காக இதற்கென உருவாக்கப்பட்ட முகநூல் பக்கத்தினையும் நீக்கிவிடுவதாக இருக்கிறோம்.

எமது இப் பணியோடு நீங்களும் பங்கெடுக்க உடன்பட்டால் அன்புடன் இந்த இணைய  மகஜரில் கையொப்பமிடும் தொடுப்பினை உங்களின் பெறுமதியான வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டு எமது முயற்சி வெற்றி பெற ஒத்துழைப்புத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தாமதிக்கப்பட்ட நீதியென்பது மறுக்கப்பட்ட நீதியென்பதைக் கவனத்தில் கொண்டு நாமனைவரும் எந்த வேறுபாடுமின்றி எமது எதிர்ப்பின்  குரலினைப் பதிவு செய்வோம்.இதுவே இணைய மகஜருக்கான முகவரி

No comments:

Post a Comment