பொதுபல சேனாவுக்கு அமைச்சர் பசில் ராஜபக்சவின் அதிரடி பதிலடி.

(அஸ்ரப் ஏ சமத்)
பொதுபல சேனாவுக்கு நான் ஒருபோதும் பயப்படபோவதில்லை. கடந்த யுத்த காலத்தில் வடக்கில் இருந்து அகதியாக வாழ்ந்து வருகின்ற முஸ்லீம்களுக்கு உரிய அரச காணிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு அதனை துண்டுகளாக வழங்கி  மீளக்குடியமர்த்திக் கொடுக்க வேண்டிய பொருப்பு இந்த அரசாங்கத்துக்கு உண்டு.  என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் மேற்படி விடயமாக வினா எழுப்பியபோது மேற்கண்டவாறு  சிங்கள சீ.நியுஸ் வெப்நியுசிக்கு கருத்து தெரிவித்தார்.
கடந்த கால கொடுர யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வடக்கில் இடம்பெயர்ந்த சிங்கள முஸ்லீம் தமிழ் சகல
மக்களையும் அவர்களுக்கு உரிய காணிகளை அடையாளம் கண்டு மீளகுடியமர்த்தப்படும்.  இம் மக்கள் எமது நாட்டின் பிரஜைகள்.  இதற்கு முன்னரும் காணிகள் வழங்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களை மீளகுடிமர்த்தியுள்ளேன்.  இந்த மக்கள் வாழ்ந்த சொந்தக் காணிகளில் இரானுவத்தினர் முகாமிட்டுள்னர். இவர்களின் பாதுகாப்புக் கடமைக்காக இக் காணிகள் சுவிகரிக்கப்பட்டன.  பொதுபலசேனா சொல்வது போன்று ஏற்கனவே வாழ்கின்ற மக்களை அகற்றுமாறு சொல்வதற்கு அவர்களுக்கு எவ்வித அருகதையும் இல்லை என அமைச்சர் பசில் பதிலளித்தார். Ref

No comments:

Post a Comment