ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்துடன் தமது அமைப்பு பகிரங்க விவாதத்துக்கு தயார் என பொதுபலசேனா அமைப்பின் பிரதம நிறைவேற்றதிகாரி எமது டெய்லி ஸிலோன் இணையத்துக்குத் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் அமைப்பு பத்திரிகையாளர் மாநாட்டின் போது விடுத்துள்ள அழைப்பினைத் தமது அமைப்பு ஏற்றுக் கொள்வதாகவும் தமது அமைப்பின் சார்பில் இளைஞர் பிரிவைச் சேர்ந்த டிலான் பரிசன இந்த விவாதத்தில் பங்கேற்கத் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருடன் விவாதிப்பதற்கே தௌஹீத் ஜமாஅத் தயாராக இருப்பதாகக் கேட்ட போது, இந்த மாதிரி போலியான அமைப்புக்களுடன் அவர் விவாதத்துக்குச் செல்ல மாட்டார் என்றும் அதற்கான தேவை அவருக்குக் கிடையாது என்றும் தெரிவித்தார்.
கௌதம புத்தரை அவமதிக்கும் வகையில் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் செயற்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து மகாநாயக்க தேரர்கள் அறிவுறுத்தியுள்ளதுடன் இந்த அமைப்பினைத் தடை செய்யுமாறு அரசிடம் வலியறுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் எமது இணையத்திடம் குறிப்பிட்டார். Ref
No comments:
Post a Comment