எம்.அம்ஹர்: பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி எனக்கு எதிராக மேற்கொண்டுள்ள அவதூறுக்கு இழப்பீடாக 500 மில்லியன் ரூபாவை வழங்க வேண்டும் எனக் கோரி பொதுபல சேனாவுக்கு சட்டத்தரணி ஊடாக அறிவிப்பு கடிதம் அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது. இழப்பீட்டை வழங்க இந்த மாதம் 21 ஆம் திகதி வரை பொதுபல சேனாவுக்கு நான் கால அவகாசத்தை வழங்குகிறேன் என அமைச்சர் றிசாத் தெரிவித்தார்.
21 ஆம் திகதிக்குள் உரிய பதில் வழங்கப்படாது போனால் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தவர்களுக்கு அரசசார்பற்ற நிறுவனங்கள் 20 ஆயிரம் வீடுகளை நிர்மாணித்து கொடுத்துள்ளன. இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களுக்கு 300 வீடுகளை நிர்மாணிக்கும் போது மட்டும் எதிர்ப்பு வெளியிடப்படுகிறது எனவும் அமைச்சர் றிசாத் தெரிவித்தார்.
இன்று மாலை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலார் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.Thanks to

No comments:
Post a Comment