பொது பல சேனாவின் தலைவர் கிரம விமலஜோதி தேரோவின் உத்தேச ராஜினாமா அந்த இயக்கத்துக்கு நெருக்கடியை தோற்றுவித்துள்ளது. பொது பல சேனா அமைப்பின் தலைமையக கட்டடம் மற்றும் பிரதான வங்கிக்கணக்கு என்பன விமலஜோதி தேரரின் பெயரில் உள்ளது இந்த நெருக்கடியை அதிகரித்துள்ளது. பொது பல சேனாவின் தலைமையக கட்டடம் விமலஜோதி தேரரின் பிரத்தியோக தொடர்புகள் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்த அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட பொது தலைவராக விமல்ஜோதி தேரரும் செயலாளராக ஞானசார தேரரும் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
விமலஜோதி தேரரின் ராஜினாமா பொது பல சேனாவின் சொத்துக்கள் விடயத்தில் பாரிய சட்ட சிக்கல்களை தோற்றுவிக்கும் என கருதப்படுகின்றது. இதன் காரணமாகவே விமலஜோதி தேரரின் உத்தேச ராஜினாமா பற்றிய தகவல்களை பொது பல சேனா திட்டவட்டமாக மறுத்து வருகின்றது.
ஏசியன் மிரர் ஊடகம் விமலஜோதி ஊடகம் நேற்று காலை விமலஜோதி தேரரின் உத்தேச ராஜினாமா விடயத்தை முழுமையாக வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததன் பின்னர் அநேகமான அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் தேரரை தொடர்பு கொண்டு கேட்ட போது பொது பல சேனாவை விட்டு தான் தூரமாகியதை ஒப்புக்கொண்டுள்ளார். அத்துடன் தெரண தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் பொது பல சேனா அழுத்கமையில் ஏற்பாடு செய்த எதிர்ப்பு பேரணியை தான் விரும்பவில்லை என்று தெரிவித்திருந்தார்.
பொது பல சேனா வன்முறையை கையில் எடுத்ததை தொடர்ந்து கடந்த ஆறு மாத காலமாக அவர் அந்த இயக்கத்தின் நடவடிக்கைகளில் இருந்து தூராமாகவே இருந்தார். இதை அந்த இயக்கத்துக்கு அவர் அறிவித்தும் இருந்தார். தனது உத்தேச ராஜினாமாவுக்கு “ஏனைய வேலைகள்” என காரணம் காட்டியிருந்தாலும் இயக்கத்துக்குள் உருவாக்கி வரும் வன்முறைப்போக்கே அவரது ராஜினாமாவுக்கு காரணம் என்பது பொது பல சேனாவில் உள்ள அனைவரும் அறிந்த இரகசியமாகும்.
கல்விமானான விமலஜோதி தேரர் தீவிர தேசியவாதியும் சிங்கள பௌத்த மக்களின் உரிமைகளுக்கான தீவிர ஆதரவாளரும் ஆகும். எனினும் அவர் ஒரு போதும் வன்மறையை கையில் எடுக்கவோ ஏனைய சிறுபான்மை இனங்களை இலக்கு வைக்கவோ போதிக்கவில்லை.
ஏசியன் மிரர் ஊடகம் பொது பல சேனாவின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திழிந்த விதானகேயிடம் குறித்த இராஜினாமா பற்றி வினவிய பொழுது தமது அமைப்பு அவ்வாறனதொரு இராஜினாமா கடிதத்தை பெறவில்லை எனவும் சில தரப்புகள் விமலஜோதி தேரருக்கும் பொது பல சேனாவுக்கும் இடையில் பிரச்சனைகளை தோற்றுவிக்க முனைவதாகவும் கூறினார்.
விமலஜோதி தேரர் பொது பல சேனாவின் தலைமைப்பொறுப்பில் இருந்தே விலகவுள்ளார். பொது பல சேனாவில் இருந்து விலகவில்லை என்பது இங்கு கவனிக்க தக்கது. இவரின் இந்த முடிவு பொது பல சேனாவை ஞானசார தனது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வழிசமைத்துள்ளது.
எனினும் அண்மையில் அளுத்கமை, பேருவளை மற்றும் தர்கா நகர் பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைகள் காரணமாக விரைவில் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பவுள்ளார் என நம்பகமாக தெரிய வருகின்றது. இதை உறுதி செய்யும் வகையில் விரைவில் பொது பல சேனாவில் தனது பதவி பற்றி விரைவில் விரைவில் ஒரு முடிவு எடுக்கவுள்ளதாக நேற்று தெரண தொலைக்காட்சி செவ்வியில் அறிவித்துள்ளார்.
அதிக எண்ணிக்கையான பௌத்த பிக்குகள் பொது பல சேனா தொடர்பில் ஏமாற்றமடைந்த நிலையில் பொது பல சேனாவில் இருந்து விமலஜோதி தேரரின் உத்தியோகபூர்வ வெளியேற்றம் அந்த அமைப்பில் பிளவையும் சட்டச்சிக்கல்களையும் உருவாக்கும் என கருதப்படுகின்றது.

No comments:
Post a Comment